குமரியில் பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் உயிரிழந்த மாணவி!

குமரியில் பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் உயிரிழந்த மாணவி!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் மிக அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மார்த்தாண்டம் அருகே குட் ஷெப்பர்ட் என்ற பெயரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது அந்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு கணிதப் பிரிவில் படித்து வரும் மாணவி ரிமி.

இன்று பள்ளியில் மதிய உணவு உண்டபின் மயக்கம் வருவதாக கூறி வகுப்பில் இருக்கையில் அப்படியே சாய்ந்து உள்ளார். மதிய உணவு இடைவேளை முடிந்து வகுப்புக்கு வந்த வகுப்பு ஆசிரியர் மாணவிக்கு எந்த முதலுதவியும் அளிக்காமல் மாணவியின் வீட்டினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தகவலறிந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது வகுப்பறையில் மாணவியை பார்த்தபோது மாணவி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வாகன வசதி எதுவும் இல்லாத நிலையில், பதறியடித்து மாணவியை அப்படியே தூக்கிக்கொண்டு வெளியே கொண்டு வந்து ஆட்டோ பிடித்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் மருத்துவர் மாணவியை பரிசோதித்துவிட்டு மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

பெற்றோர் அதைக் கேட்டு கதறி அழுதனர். சுமார் 2000 மாணவ மாணவியர் பயின்று வரும் ஒரு பள்ளியில் எந்த ஒரு முதலுதவிக்கான மருத்துவ உதவியும் இல்லாத நிலையில் ஆசிரியைகளின் கவனக்குறைவால் மாணவி உயிரிழந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்த்துளது.

எந்த ஒரு முதலுதவிக்கான மருத்துவ உதவியும் இல்லாமல், மிகவும் கவனக்குறைவாக இருந்த பள்ளியின் மீது மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் 500 மாணவ மாணவியர்களுக்கு மேல் கல்வி பயின்று வரும் கல்வி நிறுவனங்களில் தனியாக ஒரு மருத்துவர் தலைமையில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக சிறிய அளவில் மருத்துவமனை அமைக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற மரணங்கள் தவிர்க்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

ஆகவே அரசு இதில் கவனம் செலுத்தி, 500 மாணவர்களுக்கு மேல் பயின்று வரும் பள்ளிகளில் கட்டாயமாக ஒரு எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் தலைமையில் அவசர சிகிச்சை அளிக்க சிறிய மருத்துவமனை ஒன்று அமைக்க அவசர சட்டம் பிறப்பித்தால் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகளை இனிமேல் நடக்காமல் தடுக்க இயலும்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top