மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்!

மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்!

in News / Local

மார்த்தாண்டம் அருகே செம்மங்காலை பகுதியை சேர்ந்தவர் சினேகா (21). இவர் கேரள மாநிலம் செறுவாரக்கோணம் சட்டக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற சினேகா,பின்னர் வீடு திரும்பவில்லை . பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை . இது குறித்து அவரது பெற்றோர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் சினேகா, அ ேத பகுதியை சேர்ந்த தனது காதலனான வினிஷ் (26) என்பவருடன் நேற்று மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தாங்கள் 5 ஆண்டாக காதலித்து வருகிறோம். வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டை விட்டு வெளியேறினோம். எங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று போலீசாரிடம் முறையிட்டனர். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சினேகாவின் பெற்றோர்தங்களுடன் வந்துவிடு என எவ்வளவோ கெஞ்சினர். ஆனால் தனது காதலனுடன் தான் செல் ேவ ன் என அவர் உறுதியாக கூறியதால் போலீசார் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top