10 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் பயணம் .!கன்னியாகுமரி -ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தற்காலிக நிறுத்தம்;

10 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் பயணம் .!கன்னியாகுமரி -ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தற்காலிக நிறுத்தம்;

in News / Local

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக ரயில்களில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. மதுரை கோட்டத்தை பொருத்தவரை தென் மாவட்டங்களில் இருந்து சென்னை உட்பட சில நகரங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான ரயில்கள் மடஞும் போதியளவு பயணிகள் கூட்டம் உள்ளது.

பிற ரயில்களில் பயணிகளின் வரத்து 30 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. குறிப்பாக மதுரை -சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ், திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் 10 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் பயணம் செய்தனர். இதனை தொடர்ந்து மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் 50 சதவீதம் குறைவான பயணிகள் வருகை உள்ள ரயில்களின் பட்டியல் தென்னக ரயில்வே தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வழியாக வாரம் மூன்று முறை இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் வ.எண். 06165 வருகின்ற 1-ந்தேதியில் இருந்தும் மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில் வ.எண்.06166 வருகிற 2-ந்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இந்த ரயில்களில் பயணிகள் கூட்டம் 10 சதவீதம் குறைவாக இருந்ததால் மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் ரயிலை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top