நாகர்கோவிலில் எல்.ஐ.சி முகவர்கள் போராட்டம்!

நாகர்கோவிலில் எல்.ஐ.சி முகவர்கள் போராட்டம்!

in News / Local

நாகர்கோவில், வெட்டூர்ணிமடத்திலுள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன் இன்று இன்ஸுரன்ஸ் முகவர்கள் (agents) அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல வருடங்களாக அவர்களுக்கான வசதிகளையோ, சலுகைகளையோ மேம்படுத்தி கொடுக்காத காரணத்தால் எல்.ஐ.சி முகவர்கள் அனைவரும் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவற்றில் அவர்களுக்கு வழங்கிவரும் கமிஷன், போனஸ், க்ராடூயிட்டி மற்றும் அவர்களது குழு காப்பீட்டு தொகையை அதிகரிக்கவும், அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் மெடிகிளைம் பாலிசி வழங்கவும், ஈ.எஸ்.ஐ வசதி, நலன்புரி நிதி, குறைந்த வட்டியில் வீடு கடன் என மேலும் பல கோரிக்கைளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை வரை போராட்டம் நடத்தியும் எந்த உயர் அதிகாரியும் பேச்சு வார்த்தை நடத்த முன் வராததால் இந்த போராட்டத்தை தொடர போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top