ஒரே நாளில் இரண்டு இளம்பெண்கள் மாயம்.!

ஒரே நாளில் இரண்டு இளம்பெண்கள் மாயம்.!

in News / Local

குமரி மாவட்டத்தில் நேற்று வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (45) இவரது மகள் ஆர்த்தி( 19 ).இவர் நேற்று காலை முதல் காணவில்லை. ஆர்த்தியை அவரது பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் சாமிதோப்பு வடக்குகரும்பாட்டூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் இவரது மகள் அனிதா(22). இவர் நாகர்கோவில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். தனது கல்லூரியில் நடைபெறும் கேம்பஸ் இண்டர்வியூ செல்வதாக கூறிவிட்டு நேற்று காலை வீட்டிலிருந்து கல்லூரிக்கு புறப்பட்டவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அனிதாவை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் இரண்டு இளம்பெண்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top