திரிச்சூர் பாஜக வேட்பாளராக மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி தேர்வு!

திரிச்சூர் பாஜக வேட்பாளராக மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி தேர்வு!

in News / Local

மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபியை, கேரள மாநிலத்தின் திரிச்சூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பாஜகவின் நியமனத்தின்பேரில் ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக அவர் பதவி வகித்துவரும் நிலையில், இந்த வாய்ப்பானது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து பதிலளித்த சுரேஷ் கோபி, தன்மீது மிகுந்த நம்பிக்கைவைத்து இந்த வாய்ப்பை கட்சித் தலைமை வழங்கியுள்ளதால், தான் மிகவும் மகிழ்வதாக தெரிவித்தார்.

மேலும், பாஜகவின் அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சியில் நாடு மூன்று மடங்கு வளர்ச்சியை கூடுதலாக பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top