மைத்துனியை ஆட்டோவில் வைத்து சில்மிஷன் செய்தவருக்கு நேர்ந்த கதி.

மைத்துனியை ஆட்டோவில் வைத்து சில்மிஷன் செய்தவருக்கு நேர்ந்த கதி.

in News / Local

சென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன், வயது 44. இவர் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது மைத்துனி அதாவது மனைவியை சகோதரி அங்குள்ள உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், ஸ்ரீநகர் காலனி, ராகவேந்திரா தெருவில் பெற்றோருடன் வசிக்கிறார். இதற்கிடையில் சமீபத்தில் சரவணன், மாணவிக்கு போன் செய்து, 'உனது அக்கா சம்பந்தமாக பேச வேண்டும். உடனே வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு வா' என அழைத்துள்ளார்.

இதனையடுத்து அவரும் ரயில் மூலம் வில்லிவாக்கம் ரயில் நிலையம் வந்தார். அங்கு தயாராக நின்ற சரவணன், அவரை மெரினா பீச்சுக்கு சென்று பேசலாம் என கூறியுள்ளார். ஆனால், மாணவியோ,அங்கு ஏன் செல்ல வேண்டும். வீட்டுக்கு சென்று பேசலாம் என கூறியுள்ளார். ஆனால், சரவணன் வீட்டில் உனது அக்கா இருக்கிறார். எனவே, அங்கு செல்ல வேண்டாம் எனக் கூறி மாணவியை, சரவணன் ஆட்டோவில் மெரினாவுக்கு அழைத்து சென்றார். மேலும், அவர் ஆட்டோவில் போகும்போதே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி மெரினா கடற்கரை வந்ததும் வேறொரு ஆட்டோவில் ஏறி கொளத்தூரில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு மாணவி சென்றார்.

அங்கு சென்று அக்காவிடம் நடந்ததைக் கூறி மாணவி அழுது புலம்பினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறிய சரவணனின் மனைவி மாணவியை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சரவணன் மனைவியை அழைத்துவர சென்றபோதும் அவர் வர மறுத்துவிட்டார். இதனால் மனைவி மற்றும் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, மாணவி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சரவணனை கைது செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top