மண்டைக்காடு அருகே மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியவர் கைது!

மண்டைக்காடு அருகே மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியவர் கைது!

in News / Local

மண்டைக்காடு அருகே கோவிலான் விளையை சேர்ந்தவர் சதீஸ் குமார் (40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நடுவூர்க்கரையில் உள்ள தற்காலிக பஸ்ஸ்டாண்ட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கருமன் கூடலை சேர்ந்த ராஜசேகர்(56) என்பவர் சதீஸ்குமாரை தடுத்து நிறுத்தி மது குடிக்க ரூபாய் .500 கேட்டாராம். அவர் கொடுக்க மறுக்கவே ராஜசேகர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சதீஸ் குமாரை மிரட்டினார். இது குறித்து சதீஸ் குமார் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top