அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது!

அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது!

in News / Local

தக்கலை அருகே மருதூர்குறிச்சி, பாவாட்டுவிளையை சேர்ந்தவர் நாகராஜன், வயது 46.இவரது சகோதரர் கண்ணன், வயது 31. காசிவிளையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கண்ணன் தனது சகோதரர் நாகராஜனிடம் சென்று தங்கப்பன் என்பவரிடம் பணம் கடனாக வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு நாகராஜன் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கண்ணன், நாகராஜனின் வீட்டு ஜன்னல் கண்ணாடி, பைக் ஆகியவற்றை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நாகராஜன் தக்கலை பாலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top