ஈத்தாமொழி அருகே வாலிபர் மீது தாக்குதல்!

ஈத்தாமொழி அருகே வாலிபர் மீது தாக்குதல்!

in News / Local

கணபதிபுரம் அருகே பூச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(29). இவர் ஊர்க்கோயில் பணத்தில் இருந்து ரூ.2,000 கடன் பெற்றுள்ளார். இதுபோல் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடக்க உள்ளதால் ஆனந்த் தான் பெற்ற பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் கணேசன் தொகையை திருப்பி செலுத்தவில்லையாம். இதுகுறித்து ஆனந்த், கணேசனிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த கணேசன், அவரது உறவினர்கள் லிங்கம், சுயம்பு ஆகியோர் சேர்ந்து ஆனந்தை தாக்கி உள்ளனர், இதில் படுகாயம் அடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்த புகாரின்பேரில் கணேசன், லிங்கம், சுயம்பு ஆகியோர் மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top