புதுக்கடை அருகே பைக் மோதி வாலிபர் பலி!

புதுக்கடை அருகே பைக் மோதி வாலிபர் பலி!

in News / Local

புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் செந்தறை பகுதியை சேர்ந்தவர் ஜாண் (46). லேப் டெக்னீசியன். நேற்று முன் தினம் இரவு 8.45 மணியளவில் இவர், தனது பைக்கில் கருங்கல் - தேங்காப்பட்டணம் ரோட்டில் செந்தறைமுந்திரி தொழிற்சாலை அருகில் வரும் போது, எதிரே கருங்கல்தேரிவிளையை சேர்ந்த டேனியல் (25) என்பவர் பைக்கில் அதி வேகமாக வந்து ஜாண் பைக் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட ஜாண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த புதுக்கடை போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜாண் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி விசாரணை நடத்தி, டேனியல் மீது வழக்கு பதிவு செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top