தக்கலை அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது!

தக்கலை அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது!

in News / Local

தக்கலை அருகே கோயிலுக்கு அழைத்து வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் உறவினர் மகளுக்கு, நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்காக துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக உறவினர்கள் அனைவரும் கடையாலுமூடு பகுதிக்கு வந்தனர்,

பின்னர் உறவினர் மகளான 10ம் வகுப்பு மாணவியை, தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த தொழிலாளி மட்டும் குமாரகோவில் முருகன் கோயிலுக்கு புறப்பட்டார், கோயிலுக்கு அருகில் உள்ள மலைக்கு செல்வோம் என கூறி மாணவியை அங்கு அழைத்து சென்ற அவர், திடீரென மாணவியிடம் அத்துமீறி அவரை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

தொழி லா ளி யின் செய்கைகளால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தொழிலாளியின் கையை கடித்து விட்டு அங்கிருந்து தப்பி மலையின் கீழ் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் ஓடி வந்தார். மாணவியை தொழிலாளி விடாமல் விரட்டி வந்தார். வேகமாக ஓடி வந்த மாணவி, அந்த பகுதியில் உள்ள ஒரு வீட் டுக்குள் நுழைந்து பதுங் கினார். இதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் மாணவியிடம் கேட்ட போது, நடந்த சம்பவங்களை கூறி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து கதறி அழுதார். தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சினார். அந்த சமயத்தில் மாணவியை தேடி அந்த தொழிலாளியும் அந்த பகுதிக்கு வந்தார். அவரை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் திரண்டு அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.அதன் பின்னர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top