திருவட்டாறு மற்றும் குலசேகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட சாலைகளை சீரமைக்க மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை…!

திருவட்டாறு மற்றும் குலசேகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட சாலைகளை சீரமைக்க மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை…!

in News / Local

திருவரம்பு, புளிச்சிமாவிளை சாலை மற்றும் புலியிறங்கி – தெற்றியோடு சாலை ஆகியவற்றை உடனடியாக பேரூராட்சி நிா்வாகம் சீரமைக்க வேண்டும். குலசேகரம் பேரூராட்சிக்கு சொந்தமான புலியிறங்கி – தெற்றியோடு சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சுக்குநூறாக உடைந்து காணப்படுகிறது. இதே போன்று திருவட்டாறு பேரூராட்சிக்குள்பட்ட திருவரம்பு புளிச்சிமாவிளை சாலை கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மக்கள் பயன்பாட்டிற்கு சிறிதும் ஒவ்வாத நிலையில் காணப்படுகிறது.

இந்த சாலையின் தன்மையை காரணம் காட்டி, இந்த தடம் வழியாக அரசு பேருந்தை இயக்க முடியாது என்று கூறி ஊரடங்கிற்கு முன்பே சில பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடிக்கடி பல விபத்துக்கள் நிகழ்வதும், மழை காலங்களிமும், இரவு நேரங்களிலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதும் தொடா்கதையாக இருந்து வருகிறது.

இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றும் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருவது கண்டனத்திற்குரியது.

தற்போது இச்சாலைகளின் தரம் மோசமான நிலையில் இருந்து மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. மக்களின் சிரமங்களை உணா்ந்து அரசு உடனடியாக இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top