நமது குமரி மாவட்டத்தில் நிறையபேர் நினைக்கிறார்கள் சாலையேரத்தில் தண்ணீர் ஓடி பாய்ந்த உடனே அது கனமழை என்று அது தவறான ஒரு பார்வை ஆகும் ! அதுமட்டுமல்ல அறிவியல் பூர்வமாக அது தவறே
நமது குமரி மாவட்டத்தின் நில அமைப்பு ஏற்ற இறக்கம் மேடு பள்ளம் கொண்டது இதனால் சில நிமி்ங்கள் சற்று நேரம் ஒரு வலுவான மழை இருந்தால் கூட சாலைகளில் உயர்வான இடத்தில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கி தண்ணீர் ஓடும் ,
1 mm சில நெடிகள் நேரத்தில் பெய்தால் கூட மழை பெய்தால் கூட சாலையில் தண்ணீர் ஓடும்
ஆனால் அறிவியல் பூர்வமாக நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் சமவெளி பகுதியில் தாலுக்கா வாரியாக அரசு அமைந்துள்ள மழைமானி நிலையத்தில் 24 மணி நேரத்தில் எவ்வளவு mm மழை பொழிவு பதிவாகி உள்ளது என்பதை பொறுத்து தான் ஒரு தாலுக்கா பகுதியில் குறிப்பிட்ட வட்டத்தில் கனமழை பெய்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும் ,இது civil engineer படிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும் !
உதாரணத்திற்கு நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்திரிகை செய்தியில் நாகர்கோவிலில் கனமழை பெய்தது என்று செய்தி வரும் ஆனால் நாகர்கோவில் மழை அளவை பார்த்தால் 24 மணி நேரத்தில் அன்றைய தினம் ஒரு 10 mm குறைவாக தான் மழை பெய்து இருக்கும் , அந்த மழை கூட சில நிமிடங்களில் பெய்து ஓய்ந்து இருக்கும் அதனால் உயரமான இடத்தில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கி சாலையில் தண்ணீர் ஓடும் இதனை பத்திரிகை செய்தியில் உடனே சாலையில் ஓடும் தண்ணீரை பார்த்து கனமழை என்கிறார்கள்
ஆனால் உண்மையிலே கனமழை என்பது தாலுக்கா வாரியாக சமவெளி பகுதியில் நிறுவபட்டு இருக்கும் மழைமானி நிலையத்தில் 24 மணி நேரத்தில் 55 mm மேல் மழை அளவு பதிவாகி இருந்தால் அது கனமழை
உதாரணத்திற்கு நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுக்கா பகுதியில் தக்கலை,குளச்சல், இரணியல் , குருந்தன்கோடு ,கோழிபோர்விளை, அடையாமடை ,மாம்பழ்தாறுஅணை, மணவாளக்குறிச்சி, ஆனைகிடங்கு வில்லுகுறி உள்ளிட்ட சமவெளி பகுதியில் கல்குளம் தாலுக்கா பகுதியில் மழை அளவை கணக்கீடு செய்ய மழைமானி நிலையம் உள்ளது இந்த மழைமானி நிலையத்தில் எதாவது 2&3 மழைமானி நிலையத்தில் 55 mm மேல் 24 மணி நேரத்தில் மழை அளவு பதிவாகி உள்ளது என்றால் அப்போ கல்குளம் தாலுக்கா வட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து உள்ளது என்று ஊகிக்கலாம் ,அதே நேரத்தில் இந்த மழைமானி நிலையத்தில் 50 mm குறைவாக 7.6 mm மேல் அனைத்து மழை மானிகளிலும் மழை அளவு பதிவானல் அந்த தாலுக்கா அனைத்து பகுதிகளிலும் மிதமான மழை கிடைத்து இருக்கிறது என்று அர்த்தம் ,அதுபோல குமரி மாவட்டம் முழுவதும் நமக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தாலுக்காகளில் சேர்த்து மொத்தம் பொதுபணித்துறை நீர்வள ஆதார துறை 26 சமவெளி பகுதியில் மழைமானி நிலையம் குமரி மாவட்டம் முழுவதும் அமைத்து உள்ளது ,
அப்படி என்றால் உதாரணத்திற்கு கிட்டத்தட்ட 18 மழைமானி நிலையத்தில் 7.6 mm மேல் 55 mm உள் 24 மணி நேரத்தில் மழை அளவு கன்னியாகுமரி மாவட்டத்தில் பதிவாகி உள்ளது என்று வைத்து கொள்வோம் அப்போ மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சமவெளி பகுதியில் மிதமான மழை பெய்து உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும் ,
இதனால் சாலையில் சிறிது நேரம் மழை பொழிந்து ஓடும் தண்ணீரை பார்த்து கனமழை என்று கூறுவது அறிவியல் பூர்வமாக தவறு !!
நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் தாலுக்கா பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழை அளவை கணக்கீடு செய்ய அங்கே மழை மானி நிலையம் சமவெளி பகுதியில் கிடையாது, அதே போல தான் விளவங்கோடு தாலுக்கா முக்கிய இடங்களில் கூட பெய்யும் மழை அளவை கணக்கீடு செய்ய மழைமானி நிலையம் கிடையாது ! அதுபோல தமிழக பிற மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் உள்ள மலை கிராமங்களில் பெய்யும் மழை அளவை கணக்கீடு செய்ய அமைக்கப்பட்டு இருப்பதை போல நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களில் எங்குமே நமது கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் பொதுபணித்துறை நீர்வள ஆதார துறை கட்டுப்பாட்டில் மழைமானி நிலையம் எங்குமே நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் கிடையாது ,
இதனால் ஒட்டுமொத்த சமவெளி பகுதியில் பெய்யும் மழை அளவு அடிப்படையிலே நமக்கு குமரி மாவட்டத்தின் சராசரி மழை அளவு கணக்கீடு செய்ய படுகிறது ! இந்த நடைமுறை தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நமக்கு மட்டுமே சமவெளி பகுதி மழை அளவு கணக்கீடு செய்படுகிறது ஆனால் ,திருநெல்வேலி, தென்காசி, தேனீ ,கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களுக்கு சமவெளி பகுதியில் பெரிதாக கூறி கொள்ளும் அளவுக்கு மழை மானி நிலையம் கிடையாது ஆனால் மலை கிராமங்களில் மலை அடிவாரத்தில் தான் அதிக மழைமானி நிலையம் உள்ளது !
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments