பெண் ஊழியருடன் உறவு : மெக்டொனால்ட்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அதிரடி நீக்கம்

பெண் ஊழியருடன் உறவு : மெக்டொனால்ட்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அதிரடி நீக்கம்

in News / Local

மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஸ்டீவ் ஈஸ்டர் ப்ரூக் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். தன்னுடன் நிறுவனத்தில் பனி புரியும் பெண் ஊழியர் ஒருவருடன் ஈஸ்டர் ப்ரூக் உறவில் இருந்ததுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

போர்டு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ஈஸ்டர் ப்ரூக் வெளியேறிவிட்டார். இனி நிறுவனத்தின் செயல்பாடு, நிதி குறித்து அவருக்குத் தொடர்பில்லை என மெக்டொனால்ட்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் ப்ரூக்கை நீக்கிய கையோடு அந்தப் பதவிக்கு புதிய நபரையும் அறிவித்து விட்டது மெக்டொனால்ட்ஸ். மெக்டொனால்ட்ஸின் அமெரிக்க கிளைகளுக்கு பொறுப்பாளராக இருந்தவருமான கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி கொண்டு வரப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான ஈஸ்டர் ப்ரூக் பெண் ஊழியருடனான உறவை ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மெயிலில் தனது உறவு நிறுவனத்தின் கொள்கையை மீறும்வகையிலான ஒரு தவறு என்றும், நான் முன்னேற வேண்டிய நேரம் இது. நிறுவனம் எடுத்த முடிவுக்கு உடன்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top