கவிமணி  தேசிக   விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் மணி மண்டபம்!

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் மணி மண்டபம்!

in News / Local

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்

முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி, 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், இரட்டை மாலை சீனிவாசனுக்கு மதுராந்தகத்தில் ரூ.1 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் சிலை, மற்றும் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம், அவரது சொந்த ஊரான, நாகர்கோயில் அருகில் உள்ள தேரூரில் அமைக் கப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்:-110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பற்றி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

எளிமையான தோற்றமும், ஞானத்தின் உச்சமும், குழந்தைகள் மீது அளவற்ற அன்பும் கொண்டவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. குழந்தைகள் விரும்புகின்ற கவிதைகளைத் தந்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு உருவ வெண்கலச் சிலையினை அமைத்து பெருமை சேர்த்தார். தமிழ் அன்னைக்கு தனது பாடல்களால் மலரும், மாலையும் சூட்டி அழகு பார்த்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு அவருடைய பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top