மார்த்தாண்டம் அருகே பால் வியாபாரி குளத்தில் மூழ்கி பலி!

மார்த்தாண்டம் அருகே பால் வியாபாரி குளத்தில் மூழ்கி பலி!

in News / Local

மார்த்தாண்டம் அருகே வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). பால் வியாபாரி. வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வந்தார். பெட் டிக் கடை யும் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்கு கட்டிய பசுமாடுகளை வீட்டுக்கு கொண்டுவர சென்றவர் திரும்பி வரவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எங்கும் அவரை காணவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள குளம் அருகே பசுமாடுகள் அனாதையாக நின்றிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து குளத்தில் இறங்கி ராஜேந்திரனை தேடினர்.

அப்போது குளத்தில் ராஜேந்திரன் சடலமாக காணப்பட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top