பெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு!

பெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு!

in News / Local

பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் உள்ள குன்னம் கிராமத்தில், 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெங்கட்டான் குளத்தில் வண்டல் மண் எடுத்த போது, இவைகள் கிடைத்தன. மாமிச கார்னோசர் மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சௌரபோட் டைனோசரின் முட்டைகள் , கடல் ஆமை, கடல் நத்தை, கடல் சங்கு, உள்ளிட் ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கல் மரங்கள் படிமங்கள் இடம் பெற்றுள்ளன.

டைனோசர் முட்டைகள், சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top