நாகர்கோவில் நகராட்சி முன் குப்பை கொட்டும் போராட்டம்: சுரேஷ்ராஜன் அறிவிப்பு

நாகர்கோவில் நகராட்சி முன் குப்பை கொட்டும் போராட்டம்: சுரேஷ்ராஜன் அறிவிப்பு

in News / Local

நாகர்கோவிலில் குப்பைகள் சரிவர அள்ளப்படாததை கண்டித்து, நகராட்சி முன் குப்பை கொட்டும் போராட்டம் நடத்தப்படும் என நாகர்கோவில் எம்.எல்.ஏ சுரேஷ்ராஜன் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக மேலராமன்புதூர், ராமவர்மபுரம் காலனி, கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை அப்புறப்படுத்த தனியாக வரி வசூல் செய்தாலும் குப்பைகளை அகற்றாமல் இருப்பது பொதுமக்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் 52 வார்டுகளிலும் போதுமான குடிநீரும் கிடைப்பதில்லை. 7-வது வார்டுக்குட்பட்ட அருகுவிளை, 6-வது வார்டுக்குட்பட்ட காந்திஜிநகர் உள்ளிட்ட இடங்களில் பல நாட்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பிரச்சினையை நகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த பலனும் இல்லை. எனவே 52 வார்டுகளிலும் குடிநீர் சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அனைத்து வார்டுகளிலும் உள்ள குப்பைகளை சேகரித்து நகராட்சி அலுவலகம் முன் குப்பை கொட்டும் போராட்டம் திமுக சார்பில் நடத்தப்படும் என சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top