குமரியில் கள்ள காதலுக்காக பெற்ற மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற தாய் கைது!

குமரியில் கள்ள காதலுக்காக பெற்ற மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற தாய் கைது!

in News / Local

கணவன் இறந்த நிலையில், 34 வயதாகும் அவரது மனைவி மஞ்சுஷா, தமது 11ம் வகுப்பு படிக்கும் மகளுடன் தனியாக வசித்து வந்தார். தனியாக வாடகை வீட்டில் இருந்த அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அனீஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பு நீடித்த நிலையில், விடுமுறைக்கு வீடு வந்த மகள், தாய் ஆண் ஒருவருடன் தனிமையில் இருந்ததை பார்த்துவிட்டார்.

இதை மறைப்பதற்காக கள்ளக் காதலன் அனீசுடன் சேர்ந்து தனது மகளை கொலை செய்து விட்டு தப்பிவிட்டனர். பாட்டி அளித்த புகாரின் பேரில், கன்னியாகுமரியில் கள்ளக் காதலனுடன் தங்கியிருந்த தாயை பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, தனது அந்தரங்க வாழ்வு அம்பலமானதால், மகளை கொன்றதாகவும், தற்கொலை போல் மறைத்துவிட எண்ணி, கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்தனர்.

மகள், காதலனுடன் ஓடிவிட்டதாக பாட்டியிடம் கூறிவிட்டு, வெளியேறியதும் அம்பலமானது. கிணற்றில் இருந்து பெண்ணின் உடலை எடுத்து பரிசோதித்ததில், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பதைபதைக்கும் தகவல் தெரியவந்தது. கைதான கொலைகார தாய் மற்றும் கள்ளக் காதலன் அனீஷ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top