சுசீந்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார்.
அஞ்சுகிராமம் அருகே பால்குளம் வாரியூரை சேர்ந்தவர் கோபி (வயது 48). இவர் ஒரு கல்லூரியில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சுசீந்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் கோபி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments