கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பரவலாக சாரல் மழை பெய்தும் முக்கடல் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மாவட்டத்தில் காலை நிலவரப்படிமாவட்டத்தில் பூதப்பாண்டி 15.6 மி.மீ,சிற்றாறு 1ல் 5.0 மி.மீ,களியல் 3.1 மி.மீ,கன்னிமார் 12.4 மி.மீ,கொட்டாரம் 2.4 மி.மீ,மைலாடி 7.4 மி.மீ, குழித்துறை 18.0 மி.மீ,நாகர்கோவில் 45.0 மி.மீ, பெருஞ்சாணி 28.8 மி.மீ, புத்தன்அணை 28.0 மி.மீ,சிவலோகம் 23.0 மி.மீ,சுருளோடு 2.4 மி.மீ, குளச்சல் 12.6 மி.மீ, இரணியல் 66.0 மி.மீ மழை பெய்தது.
மேலும் அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக சிற்றாறு 1 ல் 7.15 அடியாகவும்,சிற்றாறு 2 7.25 அடியாகவும், பேச்சிப்பாறை அணை 41.60 அடியாகவும்,பெருஞ்சாணி அணை 54.35 அடியாகவும்,பொய்கை அணை 17.00 அடியாகவும் ,மாம்பழத்துறையாறு அணை 15.75 அடியாகவும் ,முக்கடல் அணை 0.7 அடியாகவும் உள்ளது.
இதில் பேச்சிப்பாறை அணைக்கு 130 கன அடியும் .பெருஞ்சாணி அணைக்கு 116 கன அடியும்.சிற்றார் 1, அணைக்கு 14 கன அடியும்,சிற்றார் 2 அணைக்கு 23 கன அடியும்,மாம்பழத்துறையாறு அணைக்கு 8 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
0 Comments