குமரியில் சிப்பி மீன் சீசன் குறைந்து வருகிறது

குமரியில் சிப்பி மீன் சீசன் குறைந்து வருகிறது

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கிய கொஞ்ச நாட்களுக்குள் சிப்பி மீன்களின் வரத்து குறைந்து வருகிறது . கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், கடியப்பட்டணம், இனயம் போன்ற பாறைகள் நிறைந்த கடல் பகுதியில் அதிகளவு கிடைக்கின்றன. இந்த சிப்பி மீன்கள் கடலில் இருக்கும் பாறைகளின் அடிப்பகுதியிலும் கடினமான மணல் திட்டுகளிலுமே அதிகமாக காணப்படுகின்றன.

கடலில் முக்குளிக்க பயிற்சி பெற்ற மீனவர்கள் மூச்சை அடக்கி மூழ்கிச் சென்று கத்தி, உளி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி இந்த மீன்களை பிடித்து வருகின்றனர். மீனின் தரத்துக்கு ஏற்ப 100 மீன்கள் விலை 200 முதல் 400 ரூபாய் வரை விற்பனையாகும் என்று மீனவர்கள் கூறுகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு சிப்பி மீன்கள் அதிக அளவில் ஏற்றுமதி ஆகும் என்று கூறும் மீனவர்கள் இந்த ஆண்டு உள்ளூர் தேவைக்கே மீன்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top