குமரி வங்கி ஊழியர் சாவில் மர்மம்.!போலீசாரே காரணம் என தாயார் புகார்;

குமரி வங்கி ஊழியர் சாவில் மர்மம்.!போலீசாரே காரணம் என தாயார் புகார்;

in News / Local

மார்த்தாண்டத்தை அடுத்த மூளங்குழி கிழக்கு நெய்வேலி பாலவிளையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ரோஸ்மேரி இவர்களுக்கு ஒரு மகளும் ,மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் லிவின்ராஜ்( 30). எம்.பி.ஏ பட்டதாரி ஆவார் .செல்வராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .அதன் பிறகு தனியார் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வந்து இரண்டு பேர் தங்களை போலீஸ் என கூறினார் .அவர்கள் விசாரணை நடத்த வேண்டும் என்று அழைத்து சென்றனர். பின்னர் அவரை மாலையில் வீட்டில் விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை லிவின்ராஜ் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டகருக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று லிவின்ராஜின் தாய் ரோஸ்மேரி புகார் கூறியுள்ளார் ;அவர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறப்பட்டிருந்தது .கடந்த 29ஆம் தேதி காலை 7 மணிக்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு நபர்கள் வந்து எனது மகனை அழைத்து நாங்கள் போலீசார் எனவும் உன்மீது மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார் என கூறி அழைத்துச் சென்றனர் .அப்போது நான் தடுத்தபோது விசாரணை மட்டும்தான் உடனே அவரை அனுப்பி விடுவோம் என கூறி விட்டு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றனர்.

பின்னர் உடனடியாக நானும் எனது உறவினர்களும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் சென்று தக்கலை டிஎஸ்பி அலுவலகம் உட்பட அனைத்து போலீஸ் நிலையங்களில் சென்று விசாரித்தோம். ஆனால் போலீசார் நாங்கள் யாரும் கைது செய்யவில்லை என கூறினர் .இந்நிலையில் மாலை 3:30 மணிக்கு அழைத்து சென்ற அதே இருவரும் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து விட்டனர். அப்போது எனது மகன் எண்ணை தகாகலையில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியதாகவும், மர்ம உறுப்பை தாக்கி காயப்படுத்தி சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தினர் என கூறி கதறி அழுதான்.

பின்னர் மனவருத்தத்தில் அழுதுகொண்டே படுத்து தூங்கினான். காலை 7 மணிவரை எழும்பாத தன் மகனை சென்று பார்த்தபோது இறந்து கிடந்தார் .எனது மகனின் சாவுக்கு போலீசாரே காரணம் .இறந்த என் மகனின் உடலை முறையாக உடற்கூறு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top