ஜெனீவா 42 வது ஐக்கிய நாடுகள் சபை அமர்வில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஜீவா டானிங் உரையாற்றினார்!

ஜெனீவா 42 வது ஐக்கிய நாடுகள் சபை அமர்வில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஜீவா டானிங் உரையாற்றினார்!

in News / Local

“இந்தியாவின் மாநிலங்களுக்கு தன்னாட்சி வேண்டும் . ஒரு மொழி , ஒரு கலாச்சாரம் , ஒரு மத கொள்கை பாசிச ஆட்சிக்கு வித்திடும்”- என ஜெனீவா 42 வது ஐக்கிய நாடுகள் சபை அமர்வில், பேசிய நம் குமரி மாவட்டம், நாகர்கோவிலை தமிழர் கட்சியை சேர்ந்த ஜீவா டானிங் பேசினார். இவர் குமாரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர்.

அவர் பேசிய முழு உரை

ஐக்கிய நாடுகள் சபை ஆணைய தலைவர் அவர்களே,

உலகெங்கும் 10 கோடி மக்கள் தொகையை கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக தனக்கே ஆன மொழி , இலக்கியம் , பண்பாடு , கலாச்சாரம் கொண்ட தனித்துவ இனம் தமிழ் தேசிய இனமாகும். தமிழ் மொழியே தமிழ் மக்களின் மூச்சாகவும் உயிராகவும் விளங்குகிறது.

இந்திய பெருநிலம் கன்னடம், தெலுங்கு , மலையாளம் , பெங்காளி , பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் தாயகமாக விளங்குகிறது. ஆனால் தற்போதைய நிலையில் வேற்றுமையில் ஒற்றுமை தத்துவம் இந்தியாவில் அழிவை நோக்கி நகர்கிறது.

பல பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்தியா தற்போது போகும் போக்கு இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்களை பிரிப்பதற்கான பேராசை , இது இந்தியாவின் ஒற்றுமையை காக்கும் எண்ணம் அல்ல என இந்திய பாராளுமன்றத்தில் வலியுறுத்தி பேசி வருகின்றனர். மத்திய அரசின் ஒவ்வொரு கொள்கையும் மாநிலங்கள் , பூர்வகுடி மக்களின் உரிமைகள் மற்றும் செயல்பாடுகளை முடக்கி பாசிசத்தின் ஆரம்ப அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

முன்மொழியப்பட்ட புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு , இந்தி திணிப்பு, ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு தேர்தல் ,ஒரு மத கொள்கை,காவேரி ஆற்று படுகையில் மீத்தேன் திட்டம் , கூடங்குளம் அணு உலை திட்டம் போன்ற வாழ்வியலுக்கு எதிரான திட்டங்களை திணிப்பது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை மீறும் இந்திய அரசின் செயலுக்கு சில எடுத்து காட்டுகள் ஆகும். அரசியல் லாபத்திற்காக உச்ச நீதிமன்றம் , இந்திய ரிசர்வ் வங்கி , CBI ஆகியவற்றின் செயல்பாடுகளில் வரம்பு மீறி தலையிடுதல் இவை அனைத்தும் பாசிச ஆட்சியின் அறிகுறிகள். இந்தியாவில் கூட்டாட்சி தத்துவம் அதன் மதிப்பை இழந்து வருகிறது. ஐநா தலைவர் அவர்களே இந்தியாவின் தேசிய இனங்கள் அனைத்தும் ஒற்றுமையோடு வாழ்வது என்பது சாத்தியம். ஒரே மாதிரியான இந்தியா சாத்தியமில்லை என்பதை வலியுறுத்துகிறோம்.

தேசிய இனங்களுக்கான சர்வதேச அரசியல் மற்றும் சமூக உரிமை உடன்படிக்கை மற்றும் சர்வதேச பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை மற்றும் பூர்வ குடி மக்களுக்கான உரிமைகளுக்கான உடன்படிக்கை ஆகியவற்றில் இந்தியா கையெழுத்து வைத்துள்ளது. ஆகவே இந்தியா அதன் சர்வதேச கடமைகளை மதித்து நடக்க வேண்டும். நன்றி

இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top