பிஞ்சுகளையும் விட்டு வைக்கவில்லை காசி.. சிறுமிகள் முதல் கல்யாணம் ஆன பெண்கள் வரை சீரழித்துள்ளார்.. இதற்கான ஆதாரங்களும் அவரது லேப்டாப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏராளமான பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக நாகர்கோயில் காசியை போலீசார் கைது செய்துள்ளனர்.. குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
நில மோசடி புகார், கந்துவட்டி புகாரும் இவர் மீது உள்ளது.. இதைதவிர பாதிக்கப்பட்ட பெண்களும் காசி பற்றி புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில் மேலும் சிறுமி பாலியல் புகார் அளித்துள்ளார். இப்போதைக்கு காசி மீது 5 வழக்குகள் உள்ளன. நாங்குநேரி ஜெயிலில் உள்ளார்.
அவரிடம் நடத்திய 3 நாள் விசாரணையில் பல தகவல்களை போலீசார் பெற்றுள்ளதாக தெரிகிறது.. அப்போதுதான் ஜினோ என்பவரின் பெயர் அடிபட்டது. வெறும் 19 வயதே ஆன ஜினோவின் வேலை, காசி ஏமாற்றிய பெண்களை மிரட்டுவதுதான்.. ஆபாச வீடியோக்களை சோஷியல் மீடியாவில் மார்ப் செய்து பதிவிடும் வேலையையும் செய்து வந்திருக்கிறார். இவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
அப்போதுதான் இன்னொருவர் பெயரும் சிக்கி உள்ளது.. அவரும் ஜினோவும்தான் சோஷியல் மீடியாவில் காசி சொல்லும் ஆபாச வீடியோவை அப்லோடு செய்பவர்களாம்.. பணம் தர மறுக்கும் பெண்களை போனில் மிரட்டுவதும் இவர்கள் 2 பேரும்தான்.. அந்த நண்பர் இப்போதைக்கு துபாயில் வேலை பார்த்து வருகிறாராம்.. அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
காசியிடம் சிறுமிகளும், கல்யாணம் ஆன பெண்களும் சிக்கி சீரழிந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. எல்லா வீடியோக்களையும் அந்த லேப்டாப்பில்தான் காசி பத்திரப்படுத்தி வைத்திருந்திருக்கிறார். ஜினோ & துபாய் ஃபிரண்ட் இருவரின் உதவியால்தான் பெருமளவு மோசடிகள் நடந்துள்ளன.. நூற்றுக்கணக்கான பெண்களும் நாசமாகி உள்ளனர்!
அதனால் தெலுங்கானாவைபோல இதுபோன்றவர்களையும் ஒரேயடியாக சுட்டு பொசுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.. இதனிடையே காசிக்கு, தாங்கள் யாரும் வாதாட போவதில்லை என்று நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.. பொள்ளாச்சி சம்பவத்துக்கும் இப்படித்தான் வக்கீல்கள் சங்கம் அதிரடியான முடிவை எடுத்திருந்தனர்.
காசி விவகாரமும் பொள்ளாச்சியையே மிஞ்சும் அளவுக்கு வெடிக்கும் போல தெரிகிறது.. கட்சி பிரமுகர்களும் விஐபிக்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. அந்த வகையில், காசியின் செயல்கள் மனித குலத்திற்கே எதிராக இருப்பதால் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கதே!!
0 Comments