நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தை திருவிழா!

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தை திருவிழா!

in News / Local

நாகர்கோவில், நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு தை திருவிழாவும் நேற்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி நீலகண்டபட்டதிரி திருக்கொடியை ஏற்றி விழாவை துவங்கி வைத்தார். இதனையடுத்து கொடி மரத்துக்கு தீபாராதனை நடந்தது.

இதில் நீதிபதிகள் ஜாண் ஆர்.டி.சந்தோஷம், கோமதிநாயகம், திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி, தாசில்தார் அணில்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வணங்கிவிட்டு நாகராஜரை தரிசனம் செய்தனர்.

நேற்று இரவில் பக்தி பாடல் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. அதைத் தொடர்ந்து புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளினார்.

இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, மண்டகப்படி, இன்னிசை கச்சேரி ஆகியவற்றை தொடர்ந்து புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top