நாகர்கோயில் கலெக்டர் அலுவலகம் முன் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

நாகர்கோயில் கலெக்டர் அலுவலகம் முன் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

in News / Local

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் குமரி மாவட்டக்கிளை சார்பில், நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், 16 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற மற்றும் மரணம் அடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணப்பயன் அனைத்தும் வழங்க வேண்டும், மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும், சமூக விரோதிகளிடம் இருந்து ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட பிரசார அணி செயலாளர் ஜாண்ராஜ் தலைமை தாங்கினார். சோபன், சதீஷ்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சஜிதகுமார், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் மணிகண்டன், ஆலோசகர் வினோத் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.மாநில அமைப்புச் செயலாளர் சண்முகவேல், மதுரை மண்டலத் தலைவர் சாமி, செயலாளர் ராஜசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முடிவில் மாநில தலைவர் சிவா போராட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top