ஐஸ்கிரீம் தயாரிப்பிற்காக நாஞ்சில் நிறுவனத்திற்கு பரிசு!

ஐஸ்கிரீம் தயாரிப்பிற்காக நாஞ்சில் நிறுவனத்திற்கு பரிசு!

in News / Local

தொடுவெட்டி ஜேசிஐ அமைப்பு சார்பில் நடந்த தேசிய ஐஸ் கிரீம் தின விழாவில் முககுமூடு நாஞ்சில் பால் நிறுவனம் இந்த ஆண்டின் சிறந்த ஐஸ் கிரீம் உற்பத்தி நிறுவனமாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.

நாஞ்சில் பால் நிறுவனத்தில் வைத்து நடந்த பரிசு வழங்கும் விழாவுக்கு ஜேசிஐ தலைவர் ஜேம்ஸ், மண்டல துணை தலைவர் ஆன்றூஸ் ஜெரோம் ஆகியோர் தலைமை வகித்தனர். நாஞ்சில் பால் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜெரால்டு ஜஸ்டின், இணை இயக்குநர் மனோகிலம் சேவியர், நிதி பரிபாலகர் ஆன்றூஸ் ஆகியோர் சிறந்த ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கான பரிசை பெற்றனர்.

டாக்டர் சில்வர் சுரேஷ்குமார், டாக்டர் சபீர் அகமத், டாக்டர் சாம்ஜி, உதயகுமார் ஆகியோர் பேசினர். ஜேசிஐ நிர்வாகிகள், நாஞ்சில் பால் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top