லெஸ்பியன் மோகத்தால் தோழியுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்

லெஸ்பியன் மோகத்தால் தோழியுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்

in News / Local

நாகர்கோவில் அருகே கணவருடன் விருந்துக்கு வந்த புதுப்பெண், கல்லூரி தோழியுடன் மாயமானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, இரு வாரங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தனது கணவருடன் விருந்து நிகழ்ச்சிக்காக பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த இளம்பெண், கல்லூரி சான்றிதழ் வாங்கி விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை.

கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது அவர் கல்லூரிக்கே வரவில்லை என தெரிந்தது. இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சக தோழிகளிடம் விசாரித்தபோது ஏற்கனவே தன்னுடன் கல்லூரியில் பயின்ற தோழி ஒருவருடன், இளம்பெண் நெருக்கமான உறவு வைத்திருந்தது தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த தோழி குறித்து விசாரித்தனர். அவர் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இருப்பது தெரியவந்தது. எனவே அந்த தோழியின் வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த அவரின் பெற்றோர், எனது மகள் சென்னையில் உள்ளார் என தெரிவித்தனர்.

அதையடுத்து போலீசார் அவரது மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்துக்கு முன்பே இளம்பெண்ணுக்கும், தோழிக்கும் இந்த உறவு இருந்துள்ளது,.இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு திருமணம் முடிந்த பின்னரும், கணவரின் ஆசைக்கு இணங்கவில்லை; கணவர் தன்னை தொடுவதற்கு கூட அனுமதிக்கவில்லை. புதிய இடம் என்பதால் இளம்பெண் பதற்றமாக இருப்பதாக கணவர் நினைத்துக் கொண்டார். ஆனால் தோழியுடன் மாயமான தகவலை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார்.

தற்போது மாயமான இளம்பெண்ணும், தோழியும் சென்னையில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை சென்றுள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழி மீது கொண்ட மோகத்தால், திருமணம் நிச்சயிக்கப்பட்ட அவரை சென்னையில் இருந்து கடத்தி வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது; மீண்டும் புதுப்பெண் ஒருவர், தோழியுடன்; மாயமாகி இருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top