கன்னியாகுமரியில் துறைமுகம் அமைய வாய்ப்பு இல்லை வசந்தகுமார் எம்.பி. பேட்டி!

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைய வாய்ப்பு இல்லை வசந்தகுமார் எம்.பி. பேட்டி!

in News / Local

சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரிக்கு வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி மன்சுக் மன் டாவ்யா துறைமுகம் குறித்து ஆய்வு பணிகளை மேற்கொள்வதாக கூறினார்கள். ஆனால், துறைமுகத்திற்கு மத்திய அரசோ, மாநில அரசோ இதுவரைக்கும் எந்த அறிவிப்போ, திட்ட மதிப்பீடோ அறிவிக்கவில்லை.

ஒரு மத்திய மந்திரி, ஒரு நாடாளுமன்ற தொகுதிக்குள் வரும்போது, அந்த தொகுதி எம்.பி. யிடம் தகவல் சொல்வது நாகரிகமான முறை. ஆனால், கன்னியாகுமரி தொகுதிக்கு மத்திய மந்திரி வருகிறார் என்று எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை..

கன்னியாகுமரியில் எந்த சூழ்நிலையிலும் துறைமுகம் அமைவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால், இங்கு இடவசதியும் இல்லை. கடலுக்குள் பல கிலோ மீட்டருக்கு கல்லையும், மண்ணையும் போட்டு ஒரு சம பரப்பை உருவாக்கி இங்கே துறைமுகம் அமைப்பது என்பது இயலாத காரியம்.

அதையும் மீறி தொடக்க பணிகளை மேற்கொண்டால் குமரி மாவட்டத்திலுள்ள மக்களை காப்பாற்றும் நோக்கத்தில் அதை தடுத்து நிறுத்த நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்.

காஷ்மீருக்கு சென்ற ராகுல்காந்தியை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பியது ஜனநாயக படுகொலை. அதைப்போல முன்னாள் மத்திய நிதி மந்திரி சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றால், இதுவும் பா.ஜனதாவின் செயல் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து, மன்றத்தின் சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்னம்பெருமாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாவட்ட செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top