புதுக்கோட்டையில் வட இந்தியர்கள் கடைகளுக்கு பூட்டு!

புதுக்கோட்டையில் வட இந்தியர்கள் கடைகளுக்கு பூட்டு!

in News / Local

தஞ்சாவூரில் வடமாநிலத்தவர்கள் நடத்தும் வியாபார நிறுவனங்களுக்கு இன்று அதிகாலை திடீரென பூட்டு போட்டு அங்கு சில எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை தமிழ் தேசிய கட்சியினர் ஒட்டி சென்றுள்ளனர். புதுக்கோட்டையிலும் வட மாநிலத்தவரின் 3 கடைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் வடமாநிலத்தவர்கள் ஏராளமானோர் வந்து வேலை செய்வதால், டெல்டா மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகள் பறி போகின்றன. வட மாநிலத்தவர்கள் இங்கு வந்து பேன்சி பொருட்கள், எலக்ட்ரிக் சாதனங்கள், கட்டடங்களுக்கு தேவையான டைல்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது, இனிப்பகங்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர். இதனால் உள்ளூரில் உள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய கட்சி சார்பில் வடமாநிலத்தவர்கள் தமிழகத்துக்கு வரக் கூடாது எனவும், இங்கு வருபவர்கள் திரும்பிச் செல்லுங்கள் எனவும், அவர்கள் நடத்தும் வியாபார நிறுவனங்களுக்கு இன்று பூட்டு போடும் போராட்டத்தை நடத்த போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

தஞ்சாவூரில் இனிப்பகம், ஓட்டல்கள், மார்பிள் கடைகள் என ஐந்து கடைகளுக்கு நேற்று( நள்ளிரவு திடீரென தமிழ் தேசிய கட்சியினர் பூட்டுகளை போட்டு பூட்டியும் அந்த இடத்தில் துண்டுப்பிரசுரங்களை ஒட்டி தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.இதைத்தொடர்ந்து இன்று(ஜன.,4) காலை வியாபார நிறுவனங்களுக்கு வந்த ஊழியர்களும் உரிமையாளர்களும் கூடுதலாக அங்கு ஒரு பூட்டு போடப்பட்டு இருந்தது கண்டு அங்கு ஒட்டப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை டவுன் மேல ராஜவீதியில் வடமாநிலத்தவர்கள், எலக்ட்ரிகல்ஸ் கடைகள் வைத்துள்ளனர். இக்கடைகளை தமிழ் தேசிய கட்சி என்ற பெயரில் கடைகளுக்கு பூட்டு போட்டு உள்ளனர். தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் அருகே போட்டுச் சென்றுள்ளனர். 3 கடைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top