நாகர்கோவிலில் கடன் தொல்லையால் முதியவர் தற்கொலை .!

நாகர்கோவிலில் கடன் தொல்லையால் முதியவர் தற்கொலை .!

in News / Local

நாகர்கோவிலில் கடன் தொல்லை காரணமாக முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.நாகர்கோவில்,நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் பொன்னையா ( 65) இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் .பொன்னையா விற்கு குடிபழக்கம் இருந்து வந்தது.

இதன்காரணமாக அவர் பலரிடம் கடன் வாங்கினார் .கடன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை இதனால் கடன்காரர்கள் அவரது வீட்டிற்கு வந்து பணத்தை கேட்டுள்ளனர் .


பணத்தை கொடுக்க முடியாமல் தவித்த பொன்னையா வீட்டிலிருந்து கடந்த 10ஆம் தேதி வெளியே சென்றுவிட்டார் .அதன்பின் அவர் வீட்டிற்கு வரவில்லை .அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இந்த நிலையில் பொன்னையா சரலூர் சுடுகாட்டில் புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டாறு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன்பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top