மார்த்தாண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு!

மார்த்தாண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு!

in News / Local

மார்த்தாண்டம் அருகே ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லசுவாமி (74). நேற்று காலை வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி உள்ளே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் வேறு யாரும் இல்லாததால் அவர் கிணற்றில் விழுந்தது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. சத்தம் போட்டும் காப்பாற்ற ஆள் இல்லை. இதனால் சுமார் 50 அடி ஆழ கிணற்றில் செல்லசுவாமி உயிருக்கு போராடி கொண் டிருந்தார். இந்த நிலையில் குளிக்க சென்றவரை காணவில்லை என்று உறவினர்கள் தேடினர். அவர்கள் கிணற்று பகுதியில் வந்த போது செல்லசுவாமியின் துணிகள் கரையில் இருந்தான.

கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது அங்கே செல்லசுவாமிமுனகியபடி காணப்பட்டார். பதறிப்போன உறவினர்கள் உடனடியாக குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நிலைய பொறுப்பாளர் சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.தொடர்ந்து வீரர் கள்ராஜ்குமார், சிமிதோஸ் ஆகியோர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி செல்ல சுவாமியை மீட்டனர்.

மேலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top