நாகர்கோவிலில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்ப்பட்டதாக பெற்றோர் கலெக்டரிடம் புகார்.

நாகர்கோவிலில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்ப்பட்டதாக பெற்றோர் கலெக்டரிடம் புகார்.

in News / Local

நாகர்கோவிலில் கல்லூரி மாணவி ஒருவரை திருமணமான நபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கூட்டு பாலியல் செய்ததாக மாணவியின் பெற்றோர் இன்று மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது மனைவியுடன் சென்று புகார் ஓன்று அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது.-

எனதுமகள் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த மாதம் திடீர் என அவளை காணவில்லை. இது தொடர்பாக நாங்கள் விசாரித்தபோது, நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஒருவருடன், அந்த நபரின் ஆசை வார்த்தைகளை நம்பி எனது மகள் சென்றிருப்பது தெரிய வந்தது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதை அந்த நபர் மறைத்து, தனக்கு திருமணமாகவில்லை என பொய் கூறி என் மகளை ஏமாற்றியதும் தெரிந்தது.

இது தொடர்பாக உடனடியாக கோட்டார் காவல்நிலையத்தில் நானும் எனது மனைவியும் புகார் அளித்தோம். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அந்த நபர் நான் வேலைபார்க்கும் இடத்துக்கு சிலரை அழைத்துக்கொண்டு வந்து, என்னை குடும்பத்தோடு அளித்து விடுவதாக மிரட்டி வந்தார்.

இதற்கிடையில் திடீர் என ஒருநாள் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் என்னை அழைத்து, ஏன் மகளை கூடி செல்ல கூறினார்கள் நான் போகவில்லை. காரணம் எனது மகளை ஒரு மாதகாலம் ஒளித்து வைத்து, கூட்டாளிகள் பலருக்கு அவளை விருந்து ஆகியதுடன், இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதன் பின்பு ஒரு நாள் நள்ளிரவு அந்த நபரும் கூட்டாளிகளும் எனது மகளைஎனது வீட்டருகில் கொண்டு விட்டு சென்றனர். . ஆனால் நான் எனது மகளை அந்த நபரின் தாயாரிடம் ஒப்படைத்தோம். மேலும் மகளிடம் எனது வீட்டிற்கு வரக்கூடாது என்று சொன்னோம். ஆனால் எனது மகளை நான் அடித்து விட்டதாக அந்த நபர் போலீசில் ஒரு பொய் புகார் அளித்து, அதை விசாரித்த போலீசார் மகளை நான் அளித்து சென்றால் வழக்கில் இருந்து விடுவிப்பதாக என்னை மிரட்டினார்கள். நான் சம்மதிக்கவில்லை.

பின்பு எனது மகளை இருளப்பபுரத்தில் ஒரு வீட்டில் வைத்து 4 கூட்டாளிகளுக்கு உல்லாசம் அனுபவிக்க வைத்துள்ளான். பின்பு தொட்டியோடு பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார். இப்போது காப்பகத்தில் இருந்து எனது மகள் அவளது உயிருக்கு ஆபத்து என போனில் கதறுகிறாள். ஏற்கனவே திருமணமான ஒரு நபர் எனது மகளை ஏமாற்றியதுடன், அவளது வழ்க்கையும் சீரழித்துள்ளார். அந்த நபர் அவரது முதல் மனைவியையும் இது போன்று முகாமில் சேர்த்திருப்பதாக தெரிய வருகிறது. எனவே இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top