வரும் 15-ஆம் தேதி பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறப்பு

வரும் 15-ஆம் தேதி பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறப்பு

in News / Local

நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மக்கள் பார் வைக்காக மேம்பாலம் வருகிற 15-ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் இரண்டு மேம்பாலங்களும் மொத்தம் 314 கோடியில் அமைந்து வருகிறது. மார்த்தாண்டம் மேம்பாலம் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக கடந்த 10-ஆம் தேதி திறந்துவிடப்பட்டது. மேலும் சில பணிகள் அந்த பாலத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 51 ஸ்டீல் தூண்களை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையம் அமையும் பகுதியில் காங்கீரிட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பாலம் ‘ஒய்’ வடிவில் அமைந்துள்ளது. பார்வதிபுரம் ஜங்சனில் இருந்து வடசேரி வரும் பாதையில் அமையும் மேம்பால பாதை இருவழிபாதையாகவும், கலெக்டர் அலுவலகம் செல்லும் பாதை ஒரு வழிப்பாதையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பால பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பார்வதிபுரம் மேம்பாலத்தில் பஸ் நிலையம் அமையும் இடத்தில் இருந்து பார்வதிபுரம் ஜங்சன் வரை தார் போடும் பணி நடக்கவேண்டியுள்ளது. இந்த பணிகள் வருகிற 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து பாலப்பகுதியில் போடப்பட்டு இருக்கும் விளக்குகளுக்கு மின்இணைப்பு கொடுக்கப்படவுள்ளது.

மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை பணிகள் நடக்கவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வருகிற 15-ஆம் தேதி மக்கள் பார்வைக்காக பார்வதிபுரம் மேம்பாலம் திறக்கப்படவுள்ளது. வாகன போக்குவரத்து தொடங்கிய பின், இந்த பாலத்தின் மேல் நடந்து சென்று பார்ப்பது என்பது சிரமமான நிலை ஆகும். எனவே இதை கருத்தில் கொண்டு தற்போது பாலத்தின் மேல் தளத்தில் பொதுமக்கள் நடந்து சென்று பார்வையிட்டு, பார்வதிபுரம் மேம்பாலத்தில் இருந்து இயற்கை அழகை ரசிக்கும் வகையில் வருகிற 15-ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top