ஜெபக்கூட கட்டிடப்பணிக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி!

ஜெபக்கூட கட்டிடப்பணிக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி!

in News / Local

மணவாளக்குறிச்சி அருகே சாத்தன்விளையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஜெபக்கூடத்தின் கட்டிடப்பணி நடைபெற்று வந்தது. இதற்கு பேரூராட்சியின் அனுமதியில்லாமல் கட்டிடப்பணி நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் சாத்தன்விளை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு, அனுமதியின்றி கட்டிட பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட முயன்றனர். இதுபற்றி தகவலறிந்த மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், மணவாளக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் சந்தோஷ்குமார், வருவாய் ஆய்வாளர் பிந்து ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், மாவட்ட பா.ஜனதாதலைவர் முத்துகிருஷ்ணன், மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, சாத்தன்விளை ஊர் தலைவர் தாணுலிங்கம் மற்றும் சுற்றுவட்டார ஊர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின்போது, ஜெபக்கூட கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள்கூறினர். அதைத்தொடர்ந்து ஜெபக்கூட நிர்வாகி அரசு அனுமதி பெறும் வரை கட்டிட பணி நடைபெறாது என எழுத்து பூர்வமாக செயல் அலுவலரிடம் உறுதி அளித்தார். அதன் பின்னர், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top