திற்பரப்பில் குளிக்கலாம்!

திற்பரப்பில் குளிக்கலாம்!

in News / Local

திற்பரப்பு அருவியில் 5 நாட்களுக்கு பின் குளிப்பதற்கு தடை நீக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரண்டு நாட்களுக்கு முன் இரவு தொடங்கி விடிய விடிய சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதும் அடிக்கடி மழை பெய்வதுமாக இருந்தது.கனமழை காரணமாக கடந்த 20-ம் தேதி முதல் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 21-ம் தேதி முதல் சிற்றார் அணையில் இருந்து மறுகால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்றுமுன்தினம் முழுவதும் மழை இல்லாததால் சிற்றார் அணையின் நீர்மட்டம் குறைந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. தொடர் மழை காரணமாக கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து, தொடர்ந்து சாரல் மழையாக நீடித்தது. இதனால் திற்பரப்பு அருவியில் கலங்கிய நிலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.இதன் காரணமாக 5வது நாளாக நேற்று காலை குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின் மழை நின்றதால் வெள்ளம் குறைந்தது. இதையடுத்து காலை 11 மணி முதல் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top