குமரியில் மாலை 7 மணிவரை கடை திறந்து வைக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரவை மனு

குமரியில் மாலை 7 மணிவரை கடை திறந்து வைக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனு

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆட்சியரிடம் வலியுறுத்தி மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளைத் திறந்துவைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு தளர்வு கிடைக்கும் என்று எதிர்ப்பாத்த மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீண்டும் ஒரு மாத காலம் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று அறிவிப்பை வெளியிட்டார்.

அதை தொடர்ந்து குமரிமாவட்டத்தில் மாலை 7மணி வரைக்கும் கடைகளை திறக்க ஆட்சியர் அனுமதிப்பார் என்று எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் கண்டிசனாக மாலை 5 மணிவரை தான் என்று தெரிவித்துள்ளார். இதனால் சிரமத்திற்கு ஆளாகும் தினக்கூலி வேலை செய்யும் மக்கள், மலையோர கிராம மக்கள் மாலை வேலை முடிந்து சம்பளம் பெற்று வீட்டுக்கு பொருட்கள் வாங்கிச் சென்று உணவு சமைக்கும் பல ஆயிரம் குடும்பங்கள் என அவர்களின் நலன் கருதி மாலை 7 மணி வரை அனைத்து கடைகளையும் திறந்து வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் மற்றும் களியக்காவிளை அஞ்சுகிராமம் ஆரல்வாய்மொழி பகுதிகளில் வணிக நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சோதனைச் சாவடியை பகுதியில் வசிப்பவர்கள் என எளிதில் வேலைக்கு வந்து செல்ல அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும் எனவும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த கூடுதலாக இன்னும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கொரோனா காலங்களில் வீட்டு வரி வணிக வளாகங்கள் திருமண மண்டபங்கள் போன்றவற்றிற்கு கட்டிட வரியை முழுமையாக ரத்துசெய்து செய்திட வேண்டும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதில் மாவட்ட தலைவர்.டேவிட்சன், மாவட்ட செயலாாளர் நாராயணராஜா, மாவட்ட பொருளாளர்.இராஜதுரை உள்ளிட்டோர் வருகை புரிந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top