குமரியில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 35½ அடியாக உயர்வு!

குமரியில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 35½ அடியாக உயர்வு!

in News / Local

கேரள மாநிலத்தில் பெய்ய தொடங்கிய தென்மேற்கு பருவமழை குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் இருந்து அதிகாலை வரை விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வந்தது . நாகர்கோவில் நகர பகுதியில் நேற்று பகலில் மழை இல்லை. ஆனாலும் வானம் மேகமூட்டத்துடனும், இடையிடையே வெயில் அடித்தபடியும் இருந்தது. இந்தநிலையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் மரம் விழுந்து மின்வயர்கள் அறுந்து விழுந்தன.

நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை- 14.4, பெருஞ்சாணி- 4, சிற்றார் 1- 9.2, சிற்றார் 2- 8, புத்தன் அணை- 3.2, மாம்பழத்துறையாறு- 7, முக்கடல்- 14, பூதப்பாண்டி- 5.2, களியல்- 12.4, கன்னிமார்- 9.4, கொட்டாரம்- 11, குழித்துறை- 11, மயிலாடி- 4.8, நாகர்கோவில்- 3.2, சுருளக்கோடு- 10, தக்கலை- 6.4, குளச்சல்- 16.4, இரணியல்- 7, கோழிப்போர்விளை- 12, அடையாமடை- 11, குருந்தங்கோடு- 7, முள்ளங்கினாவிளை- 5, ஆனைக்கிடங்கு- 5.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

35½ அடியாக உயர்வு

மழை குறைந்தாலும் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 767 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 337 கன அடியும், சிற்றார்-1 அணைக்கு 48 கன அடியும், சிற்றார்-2 அணைக்கு 31 கன அடியும் தண்ணீர் வந்தது.

இதனால் நேற்று பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 10.40 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 35.50 அடியாகவும், சிற்றார்-1 அணை நீர்மட்டம் 7.28 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 7.38 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 8.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 44.29 அடியாகவும் இருந்தது. இதில் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 34.40 அடியாக இருந்தது. நேற்று மாலை இந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடிக்கு மேல் உயர்ந்து 35.50 அடியை எட்டியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top