குமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்

குமரியில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய மாற்றுத் திறனாளி வாலிபர் : இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த முகநூல் காதல்

in News / Local

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி மஞ்சு பேஸ்புக் உபயோகப்படுத்தி வந்ததால் நிறைய தோழர்களின் நட்பு கிடைத்தது.

மஞ்சு தன்னுடைய முகநூல் நண்பர்கள் அனைவரிடமும் பேஸ்புக்கில் தனது கருத்துக்களை பதிவிட்டும், சாட்டிங் செய்தும் வந்தார். இதனிடையே மஞ்சுவுக்கு அஞ்சுகிராமம் அருகே உள்ள ஆவரைகுளம் பகுதியைச் சேர்ந்த ஏசுநேசன் என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

கை ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான ஏசுநேசன் முதலில் மஞ்சுவிடம் நட்பு அடிப்படையில் கருத்துக்களை பரிமாறி வந்தார். நாட்கள் செல்லச் செல்ல ஏசுநேசனின் வார்த்தைகள் மாறத் தொடங்கின. ஒருநாள் ஏசுநேசன் தான் மஞ்சுவைக் காதலிப்பதாக மஞ்சுவிடம் கூறினார்.

முதலில் அவரது காதலை ஏற்க தயங்கிய மஞ்சு, ஏசுநேசனின் தொடர் வற்புறுத்தல்கள் காரணமாக அவரது காதலை ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு அவர்கள் இருவரும் தங்களது புகைப்படங்களை பரிமாற்றிக் கொண்டனர். செல்போன் மூலம் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக அவர்களது காதல் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் ஏசுநேசன், மஞ்சுவிடம் அவரை நேரில் சந்தித்து பேச விரும்புவதாக கூறினார். மஞ்சுவும் அதற்கு சம்மதம் தெரிவித்ததால் ஏசுநேசன் தனது காரில் வெள்ளமடம் பகுதிக்கு வந்தார்.

பிறகு செல்போன் மூலம் மஞ்சுவின் எண்ணுக்கு அழைத்துத் தகவல் கொடுத்து மஞ்சுவை வெள்ளமடத்திற்கு வரவழைத்தார். மஞ்சு அங்கு வந்ததும் அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு ஆவரைகுளம் நோக்கி ஏசுநேசன் புறப்பட்டார். அந்த காரில் ஏசுநேசனுடன் வேறொரு வாலிபர் ஒருவரும் இருந்ததால் சந்தேகம் அடைந்த மஞ்சு அந்த வாலிபர் பற்றி ஏசுநேசனிடம் கேட்டார்.

அதற்கு ஏசுநேசன், அவர் தனது நண்பர் ஆதிஸ் என்றும், அவர் தனக்கு துணையாக வந்துள்ளதாகவும் கூறி மாணவியை சமாதானப்படுத்தினார். பிறகு அந்த மாணவியை காரில் அழைத்துக் கொண்டு ஆவரைகுளத்திற்கு சென்ற ஏசு நேசன், அங்கு வைத்து மஞ்சுவை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். அதோடு நில்லாமல் ஏசுநேசன் மஞ்சுவை தனது நண்பர் ஆதிசுக்கும் விருந்தாக்கினார். பின்பு தனது காரில் மஞ்சுவை ஏற்றிக் கொண்டு மீண்டும் அவரது ஊரில் கொண்டு விட்டுவிட்டு ஏசுநேசனும், அவரது நண்பரும் தப்பிச் சென்று விட்டனர்.

பாதிக்கப்பட்ட மஞ்சு தனக்கு நடந்த கொடுமையைத் தனது வீட்டாரிடம் கூறி அழுதார். பிறகு தனக்கு நேர்ந்த இந்த அவலம் குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ஏசுநேசன், ஆதீஸ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்லூரி மாணவி முகநூலில் ஏற்பட்ட தவறான தொடர்பால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

1 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top