கொல்லங்கோடு கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து ரோட்டில் ஆறாக ஓடிய தண்ணீர்!

கொல்லங்கோடு கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து ரோட்டில் ஆறாக ஓடிய தண்ணீர்!

in News / Local

ஏழு தேசம் - கொல்லங்கோடு கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் சாலை வழியாக ஆறாக ஓடியது.
ஏழு தேசம் - கொல்லங்கோடு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தாமிரபரணி ஆற்றிலிருந்து ராட்சத குழாய் மூலம் ஆலங்கோட்டில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பின்னர் பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண் ணீர் கொண்டு செல்லும் ராட்சத குழாய் ஆல்விளை பகுதியில் நேற்று காலை 12 மணியளவில் திடீ ரென உடைந் தது. இதனால் அந்த பகுதியில் ஆறு போல் தண்ணீர் ஓட துவங்கியது, அந்த பகுதியில் உள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

சாலையை தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டதால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் செய்வதறியாது நின்றனர். சம்பவம் அறிந்து தமிழ்நாடு குடி நீர் வடிகால் ஊழியர்கள் சுமார் ஒருமணி நேரம் கழித்து மோட்டரை அணைத்தனர். அதன் பின்னர் தண்ணீரின் அளவு குறைந்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top