நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி 7,9 தேதிகளில் நடக்கிறது!

நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி 7,9 தேதிகளில் நடக்கிறது!

in News / Local

பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 7ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன..

மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ம் பரிசுத் தொகையாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதலாவதாக வெற்றிபெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவில் சென்னையில் நடை பெறும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகையாக. ரூ.15 ஆயிரம், 2ம் பரிசுத் தொகையாக ரூ.12 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.

கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குத் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 9ம் தேதி (வெள் ளிக்கிழமை) காலை 9 மணியளவில் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெறவுள்ளன. மாவட்ட அளவில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசுத்தொகையாக ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு தொகையாக ரூ.7 ஆயிரம், 3ம் பரிசுத்தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். போட்டிகள் பற்றிய விவரங்கள் சுற்றறிக்கை வாயிலாகக் கல்லூரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டி களில் பங்கு பெறுவர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top