கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசார் 2 ராணுவ வீரர்களை அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்த்தாண்டம் அருகே குழித்துறை பகுதியில் ஆகஸ்ட்-15 அன்று ராணுவ வீரர்களின் இருசக்கர வானகம் விபத்துக்குள்ளானது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணைக்காக ராணுவ வீரர்கள் காவல்நிலையம் சென்றபோது அவர்களிடம் போலீசார் அநாகரிகமாக நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வழக்கு தொடர்பான முதல் நிலை அறிக்கையை கேட்டபோது தகாத வார்த்தையால் பேசியதோடு குமரி ஜவான் அமைப்பை சேர்ந்த அருண், ஜோசப் ஆகிய இருவரையும் அவதூறாக பேசியதோடு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரி ஜவான் அமைப்பினர் நாகர்கோவீல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top