செட்டிகுளம் பைக் திருட்டு வழக்கில் போலீசார் இரண்டு பேரிடம் விசாரணை!

செட்டிகுளம் பைக் திருட்டு வழக்கில் போலீசார் இரண்டு பேரிடம் விசாரணை!

in News / Local

நாகர்கோவிலில் பைக் திருட்டு சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் செட்டிகுளம் சந்திப்பு சர்குனவீதியில் ரீகன் என்பவருக்கு சொந்தமான பழைய மோட்டார் சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதனால் கடையில் வேலை பார்க்கும் வாலிபரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரீகன் கடைக்கு சென்று பார்த்த போது அங்கு இருந்த 5 நவீன மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூபாய் 2.75 மதிப்பிலான உதிரி பாகங்கள் திருட்டு போயிருந்தன. இந்த திருட்டில் அவரது கடையில் ஏற்கனவே பணியாற்றிய வாலிபர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரீகன் கோட்டார் காவல்நிலையத்தில் இதுகுருதி புகார் அளித்தார்.

போலிஸாரின் விசாரணையில், திருட்டில் முக்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படும் முன்னாள் ஊழியர் வெளிநாடு சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது, மேலும் இந்த திருட்டில் முன்னாள் ஊழியரின் நெருங்கிய உறவினர் மற்றும் நாகர்கோயில் பகுதியை சேர்ந்த இரு சக்கர வாகன நிலைய பாதுகாப்பு அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் திருட்டில் முக்கிய தொடர்புடையதாக கூறப்படும் வாலிபரின் நண்பரிடமும் விசாரணை நடைபெற்றது.இருவருக்கிடையே பரிமாறப்பட்ட வாட்ஸாப் தகவல்கள் மூலம் திருட்டு தொடர்பான பல விஷயங்கள் வெளிவந்துள்ளன. மேலும் முக்கிய குற்றவாளியான வாலிபரின் பாஸ்போர்ட் மூலம் அவர் தற்போது எங்கு உலர் என விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையின் முடிவில் இந்த திருட்டில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், இதே போன்று இவர்கள் வேறு எந்த திருட்டிலும் ஈடுபட்டுள்ளனரா என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top