வில்லுக்குறி அருகே பொதுமக்கள் சிறைபிடித்து கோழிக்கழிவு ஏற்றி வந்த லாரியை போலீசார் விடுவிப்பு!

வில்லுக்குறி அருகே பொதுமக்கள் சிறைபிடித்து கோழிக்கழிவு ஏற்றி வந்த லாரியை போலீசார் விடுவிப்பு!

in News / Local

கேரளாவில் இருந்து சமீப காலமாக மாமிச கழிவுகளை கண்டெய்னர்களில் ஏற்றி வந்து குமரி மாவட்டத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொட்டுவது,குமரி மாவட்டம் வழியாக நெல்லை மாவட்டத்துக்கு கொண்டு செல்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கேரளாவில் இருந்து மாமிச கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிக்காகவே வியாபாரிகள் பலர் செயல்படுகின்றனர். இவர்கள் கேரளாவில் இருந்து கோழி கழிவுகள், மாமிச கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு கட்டணம் அடிப்படையில் பெற்று அதை கண்டெய்னர்கள், லாரிகள், டெம்போக்களில் குமரி மாவட்டத்துக்கு கொண்டு வந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொட்டுகின்றனர். மேலும் நெல்லை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளுக் கும் கொண்டு செல்கின்றனர்.

இந்த வாகனங்களில் இருந்து கழிவு நீர் ஒழுகுவதால் நெடுஞ்சாலையில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையோரம் உள்ள பொதுமக் கள், சாலையில் வாகனத்தில் செல்லும் மக்கள் கடும் அவதியடைகின்றனர். மேலும் இந்த இறைச்சி கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நீராதாரமும் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் நித்திரவிளை வழியாக வந்த ஒரு வாகனத்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த போலீசார் கழிவுகளை கொண்டுவந்த லாரி டிரைவர் மற்றும் உடன் வந்தவரை எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் நேற்று முன் தினம் களியக்காவிளை -நாகர்கோவில் நெடுஞ்சாலையில் ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. அந்த லாரி சென்ற இடமெல்லாம் துர்நாற்றம் வீசியது.
இது குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். வில்லுக்குறி பகுதியில் அந்த கண்டெய்னர் வரும் போது பொதுமக் கள் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரித்தபோது, காவல் நிலையத்தில் உரிய அபராத தொகையை செலுத்திய பின்னர் தான் கழிவுகளை கொண்டு வருகிறோம் என கூறியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் கழிவுகளுடன் கண்டெய்னரை விடுவித்தனர். கேரளாவுக்கு திருப்பி அனுப்பாமல் கண்டெய்னரை விடுவித்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போலீசார் கண்டு கொள்ளவில்லை. அதன் பின் அந்த கண்டெய்னர் குமரி மாவட்டம் வழியாக நெல்லைக்கு சென்றது. இவ்வாறு நடப்பதால் குமரி மாவட்டத்தில் நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.

எனவே மாவட்ட காவல்துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து கேரளாவில் இருந்து மாமிச கழிவுகளை கொண்டு வருகிறவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கர்த்துக்கொண்டுள்ளார்..

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top