கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை-மகன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இந்த மரணம் குறித்து முதலில் சிபிசிஐடி அதன்பிறகு சிபிஐ விசாரணை செய்து வந்தனர்.
கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் மொத்தம் 10 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை என்பது குறிப்பிடத்தக்கது. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பால்துரை கடந்த சில நாட்களாக சிறையில் இருந்த நிலையில் திடீரென அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனை அடுத்து அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரை கொரோனாவால் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments