கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

in News / Local

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் . இவருடைய சொந்த ஊர் நாகர்கோவில் ஒழுகினசேரி. இவரது நினைவாக நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் என்.எஸ்.கிருஷ்ணன் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அவருடைய 111வது பிறந்த நாளையொட்டி நேற்று நாகர்கோவிலில் உள்ள உருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் என்.எஸ்.கிருஷ்ணன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

தி.மு.க. சார்பில் தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் என்.எஸ். கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தேசிய பேரவை சார்பில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரவையின் தலைவர் தியாகி முத்துக்கருப்பன் தலைமை தாங்கி, மாலை அணிவித்தார். அவர்கள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் இருந்த கலைவாணர் அரங்கத்தை இடித்து, கட்டப்படும் புதிய கட்டிடத்துக்கும் கலைவாணர் பெயரை சூட்ட வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top