அண்ணாநினைவு தினத்தையொட்டி அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு!

அண்ணாநினைவு தினத்தையொட்டி அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு!

in News / Local

அண்ணா நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பங்கேற்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், அவைத்தலைவர் சேவியர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் ராஜன், சுகுமாரன், ஜெயசீலன், ஜெயசந்திரன், லதா ராமசந்திரன், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பொருளாளர் கேட்சன், நகர செயலாளர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் சிவராஜ், வக்கீல் உதயகுமார், லிவிங்ஸ்டன், பெர்னார்டு, தில்லைசெல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுபோன்று ம.தி.மு.க. சார்பிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நகர செயலாளர் ஜெரோம் ஜெயகுமார் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில தணிக்கை குழு உறுப்பினர் கோபால், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்ட அ.ம.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பச்சைமால் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

மேலும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top