அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!

in News / Local

நாடு முழுவதும் அம்பேத்கர் அவர்களின் 128வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதேபோல் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் இணைந்து அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மீனாதேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கூட்டாக இணைந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் அம்பேத்கர் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

மேலும் அ.ம.மு.க. சார்பில் மாவட்ட தலைவர் பச்சைமால் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பல்வேறு அமைப்புகள், இயக்கங்களை சேர்ந்தவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top